
சுங்கை பட்டாணி, ஜனவரி-25, கெடா, சுங்கை பட்டாணி, தாமான் ரியாவில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலை, இன்று அதிகாலை ஏற்பட்ட தீயில் 80 விழுக்காடு அழிந்துபோனது.
அதிகாலை 2.30 மணிக்கு தகவல் கிடைத்து தீயணைப்பு-மீட்புப் துறையினருடன், TNB பணியாளர்களும் போலீஸாரும் உதவிக்கு வந்தனர்.
காலை 6 மணிக்குள்ளாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ ஏற்பட்ட போது தொழிற்சாலையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் வேளை, மொத்த சேதமும் மதிப்பிடப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை கூறியது.