
சுங்கை பட்டாணி, செப் 6 – சுங்கை பட்டாணியில் 51 கிலோ கிராம் கெனபிஸ் வகை போதைப்பொருளை கடத்திய குற்றத்திற்காக கணவன் மனைவி இருவர் மீது ஒரு சேர மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட்டப்பட்டது.
32 வயது fork lift ஓட்டுனர் Saiful Syamil Idris மற்றும் அதே வயதிலான அவரது மனைவி Nurul Wahida இருவர் மீது மஜிஸ்ட்ரேட் எம்.கலையரசி முன்பு குற்றப் பதிவு வாசிக்கப்பட்டபோது இருவரும் அக்க்குற்றச்ச்சாட்டை புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 30 ஆண்டு சிறை அல்லது தூக்குத் தண்டனைப் பெற வாய்ப்புண்டு.
கடந்த ஆகஸ்டு 28ஆம் திகதி பண்டார் ஶ்ரீ அஸ்தானாவில் உள்ள ஒரு வீட்டில் இருமுறை மொத்தமாக 51 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாடை அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
வழக்கு வருகின்ற டிசம்பர் 6ஆம் திகதி மறு செஇவிமடுப்புக்கு வருகின்ற நிலையில், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை,