Latestமலேசியா

சுங்கை பட்டாணி, பீடோங்கில் அதிர்ச்சி: ஆயுதம் ஏந்திய 5 ஆடவர்களால், ஒருவர் மரணம், ஒருவர் படுகாயம்

சுங்கை பட்டாணி, ஆகஸ்ட் 16 – சுங்கை பட்டாணி, பீடோங்கில் ( Bedong), 5 ஆடவர்கள், கார் கழுவும் தொழிலாளி உட்படக் காவலாளி ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 வயது மதிக்கத்தக்க அந்த இருவரையும் பாராங் கத்தியால் தாக்கியதில், மார்பு, இடது மற்றும் வலது கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு கார் கழுவும் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதேவேளையில், பலத்த காயங்களுடன் அந்த காவலாளி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையிலிருந்து விடியற்காலையில் கிடைக்க பெற்ற தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்தின் விசாரணைக்குக் கெடா காவல் படைத் தலைமையகத்தின் தடயவியல் குழு மற்றும் துப்பறியும் நாயும் விரைந்து அனுப்பி வைக்கப்பட்டன.

வேலையிலிருந்த காவலாளிக்குத் துணையாக நின்று கொண்டிருந்த அந்த கார் கழுவும் ஆடவரையும், 5 நபர்கள் தாக்கியதாக தொடக்ககட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டம் 302-யின் படியும், கொலை மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 326-யின் படியும் இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 20 வயது முதல் 30 வரையிலான 3 ஆடவர்கள் கைதாகியுள்ளதை கோலா முடா மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான வான் அசாருதீன் வான் இஸ்மாயில் (Wan Azharuddin Wan Ismail) உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!