சுங்கை பெசார், நவம்பர்-15- சிலாங்கூர், சுங்கை பாகான் தெராப் அருகே அண்மையக் காலமாக 2 முதலைகள் அடிக்கடி நடமாடுவதால், சுற்று வட்டார மக்களும் நில மீனவர்களும் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
அம்முதலைகள் குறித்த வீடியோவும் அண்மையில் வைரலாகி, வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN-னின் கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி வீடியோவைப் பதிவுச் செய்தவரை விசாரித்ததில், அது நவம்பர் 12-ஆம் தேதி இரவு பதிவுச் செய்யப்பட்டது தெரிய வந்தது.
தலா 1.5 மீட்டர் நீளத்தில் இரு முதலைகள் ஆற்றின் மேற்பரப்பில் நீந்துவது அந்த வீடியோவில் தெரிகிறது.
இந்த சுங்கை பாகான் தெராப் ஆறு தான் அம்முதலைகளின் அசல் வாழ்விடமென அப்பகுதி வாழ் மக்களும் PERHILITAN அதிகாரிகளிடம் கூறினர்.
தற்போதைக்கு அந்த ஆற்றுப் பகுதியில் சற்று கவனமாக இருக்குமாறும், முதலைகளைக் கண்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் சுற்று வட்டார மக்களை சிலாங்கூர் PERHILITAN கேட்டுக் கொண்டுள்ளது.