Latestமலேசியா

சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு உதவியாளர் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி வேட்பாளராக தேர்வு

நிபோங் தெபால், ஜூன் 16 – நிபோங் தெபால் பாஸ் உதவித் தலைவரும், காலஞ்சென்ற சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு உதவியாளருமான அபிடின் இஸ்மாயில் ( Abidin Ismail ) பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஸ் கட்சியின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் ( Tuan Ibrahim Tuan Man ) இதனை அறிவித்தார். அபிடின் இஸ்மாயில் தேர்ந்தடுக்கப்பட்டால் இவ்வளவு நாட்களாக தமக்கு கிடைத்த அனுபவத்தைக் கொண்டு சிறந்த சட்டமன்ற உறுப்பினராக சேவையாற்றுவார் என பெரிக்காத்தான் நேசனல் நம்புவதாக சிம்பாங் அம்பாட் ( Simpang Empat ) சுங்கை பக்காப் இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!