
கோலாலம்பூர், ஜன5 – Selangor . Sepang , சுங்கை பீலேக்கில் கட்டப்பட்டுள்ள Bukit ijok தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பிரச்சனைக்கு இன்னமும் தீர்வு கிடைத்தபாடில்லை. குத்தகையாளருக்கு இன்னும் 5 லட்சம் ரிங்கிட் செலுத்தவேண்டியுள்ள நிலையில், அந்த தொகையை அரசாங்கமே செலுத்த வேண்டும் என அப்பள்ளியின் மேலாளர் வாரியம் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இப்பள்ளியை திறப்பதற்கான தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பள்ளியின் மேலாளர் வாரிய தலைவர் சந்திர சேகரன் தெரிவித்திருக்கிறார். இப்பள்ளி இவ்வாண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும் என இதற்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் சில பிரச்சனை ஏற்பட்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
43 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட Bukit ijok தோட்டத் தமிழ்ப்பள்ளி 12 வகுப்பறைகள் உட்பட 6 அறைகளுடன் சுமார் 500 பேர் அமரக்கூடிய மண்டபத்தையும் கொண்டுள்ளது. இந்த பள்ளியின் கட்டுமானப் பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துவிட்டாலும் அதனை பயன்படுத்துவதற்கான தகுதி சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லை. பள்ளியில் குடிநீர் வினியோகம் கிடைத்தவுடன் இதற்கான விண்ணப்பம் செய்யப்படும் என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.