சுங்கை பூலோ, மே-3 சிலாங்கூர் பண்டார் பாரு சுங்கை பூலோவில் வாகனங்களை சர்வீஸ் செய்யும் கடையொன்றில் மண்வாரி இயந்திரத்தின் டையர் வெடித்ததில் ஒருவர் மரணமுற்று இன்னொருவர் படுகாயம் அடைந்தார்.
வைரலான அச்சம்பவம் ஏப்ரல் 30-ஆம் தேதி நிகழ்ந்ததை சுங்கை பூலோ போலீஸ் உறுதிச் செய்துள்ளது.
மண்வாரி இயந்திரத்தின் டையருக்கு சீன ஆடவர்களான 2 பணியாளர்கள் காற்றடித்துக் கொண்டிருந்த போது அது திடீரென வெடித்து இருவர் மீதும் பட்டது.
அதில் ஒருவர் அங்கேயே பலியான வேளை மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டு விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் அது குறித்து வீண் யூகங்களைக் கிளப்ப வேண்டாம் என சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் கேட்டுக் கொண்டார்.