Latestமலேசியா

சுங்கை பெசாரில் வெகு நாட்களாக அதிகாரிகளுக்கு ‘டிமிக்கி’ கொடுத்து வந்த கரடி பிடிப்பட்டது

சிலாங்கூர், சுங்கை பெசாரிலுள்ள, பாரிட் 5 கம்போட் (Parit 5 Gambut) தோட்டப் பகுதியில், வெகு நாட்களாக சுற்றி திரிந்த சூரியக் கரடி பிடிப்பட்டது.

அதிகாலை மணி நான்கு வாக்கில், கூண்டில் சிக்கிக் கொண்டிருந்த அந்த ஆண் கரடி குறித்து, பொதுமக்கள் தகவல் வழங்கியதாக, Perhilitan – வனவிலங்கு தேசிய பூங்கா பாதுகாப்பு துறை இயக்குனர் டென்னிஸ் தென் சூன் யுங் தெரிவித்தார்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் சம்பவ இடத்தை அடைந்த அதிகாரிகள், மயக்க மருந்தை செலுத்தி அதனை பிடித்தனர்.

தற்சமயம், சுங்கை பெசார் Perhilitan அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள அந்த கரடி, விரைவில் ஆள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்படும் என கூறப்படுகிறது.

முன்னதாக, கரடி ஒன்று கூண்டில் சிக்கிக் கொண்டிருக்கும் காணொளி ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!