ஷா ஆலாம், மே 2 – சிலாங்கூர், சுங்கை பேரனாங்கில், நேற்றிரவு கண்டறியப்பட்ட விநோதமான துர்நாற்றத்திற்கு “ஒரே முறை” அந்த ஆற்றில் கலக்கப்பட்ட கழிவே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
எனினும், அடை மழையைத் தொடர்ந்து, ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததால், அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளதாக, LUAS – சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கூறியுள்ளது.
அச்சம்பவத்தை அடுத்து, சுங்கை ரிஞ்சிங், சுங்கை காபூல், சுங்கை பாஜாம் ஆகிய ஆறுகளின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளை ; துர்நாற்றம் எதுவும் இன்றி அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதே சமயம், சுங்கை பேரனாங் மற்றும் சுங்கை செமெஞ்சே ஆறுகளின் தூய்மைக்கேடு குறியீடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதோடு, சுங்கை சிலாங்கூர் மற்றும் சுங்கை செம்பா ஆறுகளும் பயன்பாட்டுக்கு பாதுகாப்பாக உள்ளதை, LUAS ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.
அதனால், சம்பந்தப்பட்ட ஆறுகளின் நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இடையூறு எதுவும் ஏற்படவில்லை.
நேற்று பிற்பகல் வாக்கில், சிலாங்கூரில், சுங்கை செம்பா பகுதி உட்பட பல பகுதிகளில் பெய்த அடை மழையே அந்தற்கு காரணம என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.