Latestமலேசியா

சுடிர்மான் கிண்ணம் பேட்மிண்டன் போட்டி இந்தியாவை வீழ்த்தி காலிறுதியாட்டத்திற்கு மலேசியா தேர்வு

சுஷாவ் , மே 16 – சீனாவில் நடைபெற்றுவரும் சுடிர்மான் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் சி பிரிவுக்கான ஆட்டத்தில் மலேசியா 5 -0 என்ற ஆட்டக் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. சி பிரிவுக்கான அந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னாள் உலகச் சாம்பியன் பி.வி சிந்துவை மகளிர் ஒற்றையர் பிரிவில் 14 -21, 21-10, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி மலேசியாவின் Goh Jin Wie ஐந்தாவது வெற்றிப் புள்ளியை பெற்றுத் தந்தார். அதற்கு முன்னதாக Goh Soon Huat -Shevol Lai Jemie மற்றும் Lee Zii Jia ஆகியோரும் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் Lee Zii Jia 21 -16, 21-11 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவின் முன்னணி ஒற்றையர் ஆட்டக்காரரான K. Sri kanth த்தை வீழ்த்தினார். Aaron Chia – Soh Wooi Yik ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் , மகளிர் இரட்டையர் பிரிவில் Pearly Tan – M. Thinah ஜோடியும் மலேசியாவிற்கான வெற்றி புள்ளியை பெற்றுத் தந்தனர். மற்றொரு ஆட்டத்தில் தைவான் 5 -0 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. முன்னோடிச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் மலேசிய குழு நாளை தைவானுடன் மோதவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!