
கோலாலம்பூர், மே 19 – சீனாவில் நடைபெற்றுவரும் சுடிர்மான் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் இன்று மால மணி 5 க்கு நடைபெறும் காலிறுதியாட்டத்தில் மலேசிய குழு டென்மார்க் குழுவுடன் மோதுகிறது. அந்த ஆட்டத்தில் மலேசியா வெற்றி பெற்றால் தென் கொரியாவுக்கும் தைவானுக்குமிடையே நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்ற குழுவை அரையிறுதியாட்டத்தல் மலேசியா சந்திக்கும். டென்மார்க் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசிய குழுவினர் தங்களது அனைத்து சக்தியையும் ஒன்று திரட்டி விளையாடினால் வெற்றி பெறமுடியும் என மலேசிய குழுவின் கேப்டன் Tan Kian Meng தெரிவித்தார். நேற்று ஏ பிரிவுக்கான கடைசி ஆட்டத்தில் சீனாவிடம் 5 -0 என்ற ஆட்டக்கணக்கில் டென்மார்க் தோல்வி அடைந்துள்ளது. டென்மார்க் குழுவை ஏற்கனவே வீழ்த்த்தி அனுபம் மலேசியாவிற்கு இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்காக மலேசிய குழுவினர் கடுமையாக பாடுபடுவார்கள் என அவர் கூறினார்.