Latest

சுடும் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டை மறுத்தான் இஸ்ரேலிய ஆடவன்

கோலாலம்பூர், ஏப்ரல் 12 – சுடும் ஆயுதங்கள் வைத்திருந்தது தொடர்பில் இன்று கொண்டு வரப்பட்ட 2 குற்றச்சாட்டுகளையும் இஸ்ரேலிய உளவாளி என நம்பப்படும் ஆடவன் மறுத்துள்ளான்.

Avitam Shalom என அடையாளம் கூறப்பட்டுள்ள அவ்வாடவன் முன்னதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டான்.

மார்ச் 26 முதல் 28 வரை அம்பாங்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 6 கைத்துப்பாக்கிகள் மற்றும் 158 தோட்டாக்களை வைத்திருந்ததாக அவன் மீது குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

மேலும் கடுமையான தண்டனையை வழங்க வகைச் செய்யும் சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் 7-வது பிரிவின் கீழும், 1960-ஆம் ஆண்டு சுடும் ஆயுதங்கள் சட்டத்தின் 8-வது பிரிவின் கீழும் Avitan அவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளான்.

மேற்கண்ட முதல் பிரிவுக்கு, 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும், குறைந்தது 6 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அதே சமயத்தில் அடுத்த பிரிவுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை மற்றும் பத்தாயிரத்திற்கும் மேற்போகாத அபராதம் விதிக்கப்படலாம்.

Avitan-னை பிணையில் விடுவிக்க மறுத்த நீதிமன்றம், மே 21-ஆம் தேதி வழக்கு செவிமெடுப்புக்கு வருமென அறிவித்துள்ளது.

முன்னதாக Black Maria போலிஸ் வாகனத்தில், ஆயுதமேந்திய போலீஸ்காரர்களின் கடும் பாதுகாப்போடு அவன் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டான்.

பிரான்ஸ் நாட்டு கடப்பிதழைப் பயன்படுத்தி மார்ச் 12-ஆம் தேதி நாட்டுக்குள் நுழைந்த Avitan-னுக்கு, சுடும் ஆயுதங்களைத் தருவித்ததன் பேரில் உள்ளூர் தம்பதி கைதாகி, சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!