Latestமலேசியா

சுட்டி நிருபரின் ஆசையை நிறைவேற்றினார் பிரதமர்

கோலாலம்பூர், பிப் 7 – தனது வீடமைப்புப் பகுதியில் , மலைப்பாம்பு கண்டெடுக்கப்பட்ட தகவலை காணொளியின் மூலமாக மிக சரளமாக அறிவித்து பலரது கவனத்தை ஈர்த்த 12 வயது சிறுவனின் கனவை நனவாக்கியிருக்கின்றார் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

கெடாவைச் சேர்ந்த 12 வயது Muhammad Haziq , பிரதமரை நேர்காணல் செய்ய வேண்டுமென தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வாய்ப்பு நேற்று Haziq- கிற்கு கிட்டிய வேளை, பிரதமரிடம் சில கேள்விகளை அவர் முன் வைத்தார்.

அந்த நேர்காணலின்போது பிரதமர் தனக்கு பிடித்த சில விஷயங்களை தெரியப்படுத்தியதோடு, நாட்டை மேம்படுத்தும் திட்டங்களையும் , தலெசிமியா பாதிப்புள்ள Haziq -குடன் பகிர்ந்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!