
சென்னை, மார்ச் 30 – நடிகர் விஜய்க்கு அதிகமான குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாங்க என்று குழந்தை ஒன்று கோரிக்கை விடுக்கும் காணொளியை பல்லவரத்தைச் சேர்ந்த அதன் பெற்றோர் வெளியிட்டிருந்தனர். அந்த காணொளி வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தையின் விருப்பத்தை இளைய தளபதி விஜய் நிறைவேற்றினார்.