Latestமலேசியா

சுபாங் ஜெயாவில் ஃபிலிப்பின்ஸ் நாட்டு சிறுமி மரணம்; சித்ரவதை காரணமல்ல – போலீஸ் தகவல்

சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-4, சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் கடந்த வியாழன்று ஃபிலிப்பின்ஸ் நாட்டு சிறுமி மரணமடைந்த சம்பவத்திற்கு சித்தரவதை காரணமல்ல.

மாறாக அது ஒரு திடீர் மரணமென போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.

சவப்பரிசோதனையில் 11 வயது அச்சிறுமியின் உடலில் காயத் தளும்புகள் எதுவும் கண்டறியப்படவில்லையென, சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) தெரிவித்தார்.

முன்னதாக சுபாங் ஜெயா, USJ 6, Goodyear Court 2 அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் ஆகஸ்ட் 1-ம் தேதி அச்சிறுமி இறந்து கிடந்தாள்.

அவளின் தாய் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவக் குழுவும் போலீசும் சம்பவ இடம் விரைந்தது.

அவள் இறந்து விட்டதை மருத்துவக் குழு உறுதிச் செய்ததும் செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்கு சவப்பரிசோதனைக்காக சடலம் அனுப்பப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!