
சுபாங் ஜெயா, மார்ச்-24 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த வாரம் 14 வயது பெண் பிள்ளையை மானபங்கம் செய்த சந்தேகத்தில், ஒரு போலீஸ்காரர் கைதாகியுள்ளார்.
புக்கிட் அமான் பாலியல் குற்றப் பிரிவு அதனை உறுதிப்படுத்தியது.
சந்தேக நபர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக USJ8 போலீஸில் புகார் செய்தார்.
தானும் தனது ஆண் நண்பரும் அந்த ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்த போது, திடீரென அந்த போலீஸ்காரரும் தனது தந்தையும் அங்கு வந்து அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக அப்பெண் தனது புகாரில் கூறினார்.
அறையை பரிசோதித்த போது போலீஸ்காரர் தன்னை மானபங்கம் செய்ததாக போலீஸ் புகாரில் கூறப்பட்டுள்ளது.