கோலாலம்பூர், ஜன 5 – இந்த ஆண்டு சீனர்களுக்கு புலி ஆண்டாகும். பொதுவாகவே புலி ஆண்டு சுபிட்சத்தை கொண்டு வரும் என சீனர்கள் நம்புகின்றனர். ஆனால் மலாயா புலிகளுக்கு இது ஓர் சோதனைமிக்க ஆண்டாக கருதப்படுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் மலேசியா 70 விழுக்காடு புலிகளை இழந்துவிட்டது. மலேசியாவின் அடையாள சின்னமாவும் புலி விளங்குகிறது. இந்த நிலையில் நாட்டில் இன்னமும் சுமார் 150 புலிகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத வேட்டை உட்பட பல்வேறு காரணங்களால் புலி தொடர்ந்து அழிந்துவருகின்றன. புலி இனங்களை அழிவதை தடுப்பதற்கு விவேகமான நடவடிக்கை அவசியம் என்கிறார் வனவிலங்கு உயிரியாளரான Kae kawanishi. காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். புலிகளின் உடல் பாகங்களை வாங்காமல் இருந்தால் புலி வேட்டைகளும் தடுக்கப்பட முடியும் என புலிகளுக்கான மலேசிய பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவருமான அவர் வலியுறுத்தினார்.