கோலாலம்பூர், ஏப் 14 – இன்று பிறக்கின்ற குரோதி புத்தாண்டு நம் அனைவரின் வாழ்வில் வளத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிடும் என நம்புவோம்.
கால மாற்றத்துக்கு ஏற்ப நமது வாழ்வில் தற்போது புற சவால்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் நமது அக அழுத்தமும் கூடி வருவதை மறுக்க முடியாது.
இவற்றை எதிர்கொண்டு நமது வாழ்வாதாரத்தை தொடர்ந்து உயர்த்தி எங்கும் மகிழ்ச்சி பொங்கும் சூழலை உருவாக்க நமது தனி மனித அறிவு, ஆற்றல், திறன், உழைப்பு ஆகியவை வலுப்பெற்றதாக இருத்தல் அவசியம்.
அதுவே நாமும் நம் சமுதாயமும் சுயகாலில் நிற்கும் தகுதியையும் சக்தியையும் உருவாக்கும். பிற சமூகம் நம்மை மெச்சும் நிலைக்கு உயர்த்தும்.
அந்த சிந்தனையோடு இந்த புத்தாண்டில் நாம் ஒவ்வொருவரும் தனி மனித அறிவு, ஆற்றல், திறன், உழைப்பை பெருக்கிட உறுதி கொள்வோம்!
அனைவருக்கும் வணக்கம் மலேசியாவின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!