Latestமலேசியா

சுயநலத்திற்காக கட்சிப் பணத்தை பயன்படுத்தினர்; அம்னோ டிவிசனின் இரு முன்னாள் தலைவர்கள் தடுத்துவைப்பு

ஜோர்ஜ் டவுன், செப் 13- சுயநலத்திற்காக ஆறு லட்சம் ரிங்கிட் கட்சிப் பணத்தை பயன்படுத்தியதன் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு பினாங்கு அம்னோ டிவிசனின் இரண்டு முன்னால் தலைவர்கள் ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பில் 2009-ஆம் ஆண்டின் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 23-ஆவது விதியின் கீழ் இன்று முதல் 19-ஆம் தேதிவரை அந்த இரண்டு ஆடவர்களும் தடுத்து வைக்கப்படுவதற்கான உத்தரவுக்கு மாஜிஸ்திரேட் ரோஸ்னி முகமட் ரிட்சுவான் அனுமதி வழங்கினார். அம்னோ டிவிசனின் வங்கி கணக்கிலிருந்து பல முறை பணம் மீட்கப்பட்டது தொடர்பில் அந்த இரண்டு ஆடவர்களுக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கல்வி அறவாரியத்தின் கணக்கிலிருந்த பணத்தை அவர்கள் இருவரும் தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!