
வியெனா , ஜூன் 8 – ஆஸ்திரியாவில், ஹாம்பர்க் மற்றும் ஆம்ஸ்டர்டம்மை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது, சுரங்கப்பாதையினுள் இரயிலின் கேபில் உரசி தீ விபத்து ஏற்பட்டதில்
அதில் பயணம் செய்து கொண்டிருந்த 200 பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதே சமயத்தில் 45 பயணிகள் சிறு தீப்புண் காயங்களுங்களுடன் உயிர் தப்பியதாக போலிஸ் தரப்பு கூறியுள்ளது.
சுமார் இரவு மணி 10.19 அளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தை தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இரவு 11.40 மணியளவுக்குள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.