
கோலாலம்பூர், மே 28 – பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேறியிருக்கும் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுராய்டா கமாரூடின் தற்போதைக்கு தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்திருப்பார் என பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
சுராய்டா தோட்டத் தொழில் மூலப் பொருள் அமைச்சர் பொறுப்பிலிருந்து இன்னும் விலகவில்லை. தாமும் அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கவில்லை. எனவே அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்திருப்பார்.
ஜப்பானுக்கான அலுவல் பயணம் முடித்து நாடு திரும்பிய பின்னர் தாம் சுராய்டாவை சந்திக்கவிருப்பதாக பிரதமர் கூறினார். அதுவரையில் அமைச்சரவை பொறுப்புகளை சுராய்டா கவனித்துக் கொள்வார் என அவர் குறிப்பிட்டார்.