Latestமலேசியா

பினாங்கில், தைப்பூசத்தை முன்னிட்டு இலவச ‘பெர்ரி’, பேருந்து சேவைகள்

பட்டர்வொர்த், ஜனவரி 16 – பினாங்கில், தைப்பூசத்தை முன்னிட்டு ‘பெர்ரி’ (ferry) படகு சேவையையும், பேருந்து சேவைகளையும் மக்கள் இலவசமாக பயன்படுத்தலாம்.

குறிப்பாக, SPPP – பினாங்கு துறைமுக ஆணையமும், பினாங்கு துறைமுக நிறுவனமும் இணைந்து, தைபூசக் கொண்டாட்டத்தின் போது, இந்துக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், இலவச பெர்ரி பயணப் படகு சேவைகளை வழங்கவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ஜனவரி 24-ஆம் தேதி, நள்ளிரவு மணி 12.01 முதல் ஜனவரி 26-ஆம் தேதி பின்னிரவு மணி இரண்டு வரையில், பொதுமக்கள் அந்த இலவச பெர்ரி சேவையை பயன்படுத்தலாம்.

பெர்ரி வாயிலாக, பங்கலான் ராஜா ஊடா படகு முனையம் சென்றடையும் பயணிகள், அங்கிருந்து இலவச Rapid Penang பேருந்து சேவைகளை பயன்படுத்தலாம்.

இலவச சேவைகளை வழங்கும் பேருந்துகள், வழி நெடுகிலும் உள்ள வழிப்பாட்டு தளங்களில் நிற்கும் என்பதோடு, இறுதியில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலை சென்றடையும்.

இதனிடையே, Rapid Penang பேருந்துகள், இம்மாதம் 24-ஆம் தேதி பிற்பகல் மணி இரண்டு முதல் பின்னிரவு மணி ஒன்று வரையிலும், 25-ஆம் தேதி அதிகாலை மணி 5.30 தொடங்கி பின்னிரவு மணி ஒன்று வரையிலும் இலவச சேவையை வழங்கும்.

குறிப்பாக, பண்டிகை காலங்களில் பொது போக்குவரத்து சேவைகளின் பயன்பாட்டை அதிகரிக்க அம்முயற்சி உதவுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக, லோக் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!