
கோலாலம்பூர், டிச 28 – இம்மாதம் தொடக்கத்தில் வழங்கப்பட்ட காரணம் கோரும் கடிதத்திற்கு பதில் அளிக்கக் தவறிய Zuraida Kamaruddin மற்றும் மேலும் 10 பேரை
PBM எனப்படும் Parti Bangsa Malaysia கட்சி நீக்கியிருக்கிறது. தலைமைச் செயலாளர் Nor Hizwan Ahmad, இளைஞர் பிரிவு தலைவர் Na’ im Brundage ஆகியோர் உட்பட 11 பேர் நேற்று முதல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக PBM கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. இதனிடையே Haniza Talha கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்தும், Daroyah Alwi மகளிர் பிரிவு தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டனர். எனினும் அவர்களது உறுப்பியம் ரத்து செய்யப்படவில்லையென PBM கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கட்சியின் நலன் கருதி அந்த 11 தனிப்பட்ட நபர்களின் நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.