சிட்னி. பிப் 17 – சிட்னி கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கும் நீச்சல் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளில் முதல் முறையாக சுறாமின் தாக்கி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து சிட்னி கடலோரப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கு தனது எல்லைப் பகுதிகளை ஆஸ்திரேலியா திறந்த ஒரு நாளுக்குப் பின் கடலோரப் பகுதிகளில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் அடையாளமாக திகழும் Bondi கடற்கரைக்கும் மக்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. சுறா தாக்கப்பட்ட நபரின் உடல் சிட்னி கடற்பகுதியில் மீட்கப்பட்டதையும் ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகள் உறுதிப்டுத்தினர். 4.5 மீட்டர் நீளம் உள்ள சுறாவினால் அந்த நபர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது