வடகொரியா, ஆகஸ்ட் 16 – கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர், முதல் முறையாக வடகொரியா சுற்றுலாப் பயணிகளுக்காக தங்கள் எல்லையை திறக்க முடிவு செய்துள்ளது.
வெளியான தகவல்களின் அடிப்படையில், சுற்றுலாப் பயணிகளுக்காக Samjiyon நகரம் தயார் படுத்தப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தலைநகர் Pyongang சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏவுகணை சோதனை தளத்திற்கு அருகாமையில் கடற்கரை சொகுசு விடுதிகளை வடகொரியா உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை அடுத்து அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அங்கு செல்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, சீனாவில் செயல்பட்டுவரும் இரு நிறுவனங்கள் தங்கள் சுற்றுலா பயணிகளை டிசம்பர் மாதம் முதல் வடகொரியாவுக்கு அழைத்துச் செல்ல தயார் என அறிவித்துள்ளனர்.
இதுவரை வெளியான தகவல்கள் அடிப்படையில் Samjiyon நகரம் மட்டுமே சுற்றுலாவுக்கு என திறக்கப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தலைநகர் Pyongang உட்பட பல நகரங்களில் பார்வையாளர்களை அனுமதிப்பார்கள் என்றும் அதில் ஒரு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.