
கோலாலம்பூர், நவ 6 – சுற்றுலா தொழிழ்துறையை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுப்பதற்கு பெரிக்காத்தான் நேசனலின் ஆட்சியிலுள்ள நான்கு மாநிலங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. சுற்றுலா தொழில்துறையை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கிளந்தான, பெர்லிஸ், கெடா மற்றும் திரெங்கானு ஆகிய நான்கு மாநிலங்களின் சுற்றுலா மீதான ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டங்களை நடத்தி விவாதித்துள்ளன.
கடந்த மாதம் மத்தியில் தாசிக் கென்யிரில் நான்கு மாநில அரசாங்கங்களின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களது முதலாவது கூட்டத்தையும் கலந்துரையாடலையும் நடத்தியதாக திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ரஜாளி இட்ரிஸ் தெரிவித்தார். அந்த இரண்டு நாள் கூட்டத்தில் நான்கு மாநிலங்களின் சுற்றுலா தனித்துவங்களை அறிமுகப்படுத்துவது குறித்து இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.