Latestமலேசியா

சுற்றுலா வேன் மரத்தில் மோதியது; ஒருவர் மரணம்; மூவர் காயம்

பெந்தோங், பிப் 22 – சுற்றுலா வேன் ஒன்று கவிழ்ந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் மூவர் காயம் அடைந்தனர், ஜாலான் கெந்திங் மலைக்கு அருகே 9.5 ஆவது கிலோமீட்ரில் நேற்றிரவு அந்த விபத்து நிகழ்ந்தது.

இரண்டு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்து வேனில் சிக்கிக்கொண்டவரின் உடலை மீட்டனர். தீயணைப்பு படையினர் வருவதற்கு முன்னதாகவே காயம் அடைந்த மூவர் பொதுமக்களின் உதவியோடு மீட்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!