Latestஉலகம்

சுற்று பயணிகள் தாய்லாந்தில் தங்கும் அனுமதி 45 நாட்களுக்கு நீட்டிப்பு

பெங்காக், செப் 22 – தாய்லாந்து செல்லும் சுற்றுப் பயணிகள் அந்நாட்டில் தங்கி இருப்பதற்கான கால அவகாசம், 30 நாட்களில் இருந்து 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டிற்கு செல்ல விசா விலக்கு அளிக்கப்பட்டிருக்கும் 64 நாடுகள் அல்லது வட்டாரங்களை சேர்ந்த சுற்றுப் பயணிகளுக்கு மட்டுமே அந்த சலுகை வழங்கப்படுகிறது. தாய்லாந்துக்கு வருகை புரியும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதே சமயம், இந்தியா, சவுதி அரேபியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு வழங்கப்படும் விசா அனுமதியை 15 நாட்களில் இருந்து 30 நாட்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கும் அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடுத்த மாதம் முதலாம் தேதி தொடங்கி, 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை அந்த சலுகைகள் அமலில் இருக்கும். நாட்டின் பொருளாதாரத்தை உந்தச் செய்வதோடு, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முயற்சியாக அந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!