Latestஉலகம்

அமெரிக்காவில் அயோவா (Iowa) பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவன் மரணம்; இதர ஐவர் காயம்

பெர்ரி, ஜன 5 –  அமெரிக்காவில் அயோவா (Iowa) மாநிலத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆயுதம் ஏந்திய  பதின்ம வயது மாணவன் சக மாணவர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில் மாணவன் ஒருவன் கொல்லப்பட்டான். அச்சம்பவத்தில் இதர  ஐந்து மாணவர்கள் காயம் அடைந்தனர். விடுமுறைக்குப் பின் பள்ளியின் முதல் நாளன்று வகுப்பு தொடங்குவதற்கு முன்னதாக  காலை 7.30 மணியளவில் அந்த சம்பவம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெர்ரி உயர்நிலைப் பள்ளிக்கு உடனடியாக போலீசார் குவிந்தனர். அந்த உயர்நிலைப் பள்ளியின் காலை சிற்றுண்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது மாணவர்கள் துப்பாக்கிச் சூடு காயத்திற்கு உள்ளாகினர். 

இதனிடையே இந்த தாக்குதலை நடத்திய டிலான் பட்லர் என்ற 17 வயது மாணவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதால் மாண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.  அந்த உயர்நிலைப் பள்ளியில் வெடிப்பு கருவியும்  கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு ஒரு நாளுக்கு முன்னதாக 15 வயது சிறுவன் ஒருவன் விர்ஜீனியாவிலுள்ள உயர் நிலைப்பள்ளிக்கு வெளியே ஆடவர் ஒருவரை சுட்டதாகவும் தகவல் வெளியானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!