
கோலாலம்பூர் , மார்ச் 14 -சுலு சுல்தானின் வாரிசுதாரர்கள் தரப்பு எழுப்பியுள்ள விவகாரங்களை கவனிப்பதற்கு France உட்பட ஐரோப்பாவுக்கான அரசாங்கத்தின் பிரதிநிதியாக பிரதமர் துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ Azalina நியமிக்கப்பட்டுள்ளார்.
சுலு சுல்தான் வாரிசுதாரர்கள் எனக் கூறிக்கொண்ட தரப்பினரின் கோரிக்கைகளை தடுப்பதில் சாத்தியமான அனைத்து அம்சங்களையும் மலேசியா ஆராய்ந்து வருவதோடு இறையாண்மையை தற்காத்துக் கொள்வதில் விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லையென சுலு கோரிக்கை தொடர்பான சிறப்பு செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
தேசிய இறையாண்மை மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் அரசாங்கம் எதனையும் விட்டுக்கொடுக்காது என இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்த செயலகம் தெரிவித்துக் கொண்டது.
இதர எட்டு கோரிக்கையாளர்களுக்கும் அரச சுலு படைகளின் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பதையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.