கோலாலம்பூர், மார்ச் 2 – சூலு சுல்தானின் வாரிசு என கூறியிருக்கும் தரப்புக்கு , மலேசிய அரசாங்கம் 6,300 கோடி ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டுமென , ஸ்பெய்ன் நடுவர் நீதிமன்றம் எடுத்துள்ள முடிவிற்கு, மலேசியா கட்டுப்படாது.
அந்த இழப்பீடு வர்த்தகம் சார்ந்த ஒரு தொகையை உட்படுத்தியிருக்கவில்லை . அதனால் அந்த விவகாரத்தை நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என வெளியுறவு அமைச்சும், தேசிய சட்டத் துறையும் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.
சூலு சுல்தான் வாரிசு என கூறிக் கொண்டிருக்கும் தரப்பின் அடையாளத்திலும் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது.
2013 சபா , லாஹாட் டத்து ஊடுருவலுக்குப் பின்னர் மலேசியா , சுலு சுல்தானின் வாரிசுக்கு 5,300 ரிங்கிட் வருடாந்திர இழப்பீடு தொகையை செலுத்துவதை நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.