
கோலாலம்பூர், பிப் 28 – மறைந்த சுலு சுல்தானின் வாரிசுதாரர்கள் எனக்கூறிக்கொள்ளும் தரப்பினரின் அடுத்த இலக்கு மலேசிய ஏர்லைன்ஸ் மற்றும் Boustead Shipping Agencies ஆகியவை இருக்கக்கூடும் என அரசாங்கம் நம்புவதாக சட்ட மற்றும் அமைப்பு சீரமைப்புக்கான அமைச்சர் Azalina Othman Said தெரிவித்திருக்கிறார். சுலு சுல்தான் வாரிசுதாரர்களின் இலக்கு வர்த்தக சொத்துக்கள் மீதுதான் இருக்கிறது. அவர்கள் அனைத்து சொத்துக்கள் மீதும் முயற்சித்ததோடு தற்போது மலேசியா சம்பந்தப்பட்ட இதர சொத்துக்களில் குறிவைத்திருப்பதாக Azalina கூறினார். எனவே இந்த விவகாரத்தில் நாம் அதிக கவனமாக இருக்க வேண்டியருப்பபதாக அவர் சுட்டிக்காட்டினார்.