
புத்ரா ஜெயா, மே 26 – தங்களை சுலு சுல்தான் வாரிசுதாரர்கள் என சொந்தமாக பிரகடன்படுத்திக் கொண்டு புத்ரா ஜெயாவுக்கு எதிராக கோரிக்கைகளை எழுப்பிவரும் தரப்பினருக்கு எதிராக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு போலீசில் புகார் செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு July மாதத்தில் 32 பில்லியன் அமெரிக்கா டாலர் அல்லது 148 பில்லியன் ரிங்கிட்டை நடுவர் மன்றத்தின் மூலம் புத்ரா ஜெயாவுக்கு எதிராக சுலு சுல்தான் வாரிசுதாரர்கள் என கூறிக்கொண்ட தரப்பு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த போலீஸ் புகாரை செய்துள்ளது. அவர்களது கோரிக்கை தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக இருப்பதோடு பொருளாதாரத்தை கீழறுப்பு செய்யும் நடவடிக்கையாக இருப்பதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.