ஸ்டாக்ஹோம், பிப் 4 – பொது விடங்களில் ஆங்காங்கே வீசப்படும் சிகரெட் துண்டுகளை அகற்றி தெருக்களை சுத்தமாக வைத்திருக்க நூதனமான புதிய முறையைக் கையாண்டிருக்கிறது சுவீடனில் உள்ள நிறுவனமொன்று.
Corvid Cleaning எனப்படும் அந்த நிறுவனம், தெருக்களில் கிடக்கும் சிகரெட் துண்டுகளை கொண்டு வந்து சேர்க்கும் காகங்களுக்கு, ஒவ்வொரு முறையும் சிறிதளவு தானியங்களை கொடுக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது.
காகங்கள் மிகவும் புத்திசாலிகளான பறவைகளாகும். அவற்றுக்கு விரைந்து பயிற்சியளித்து விடலாம். அத்துடன் ஒரு காகம் செய்யும் செயலை மற்றொரு காகம் விரைந்து கற்றுக் கொள்வதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அதுமட்டுமா ? இந்த நூதன முறையின் கீழ், சுவீடன் நகரின் தெருக்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான செலவையும் இப்புதிய முறை வெகுவாகக் குறைத்திருக்கின்றது.