
கோலாலம்பூர், மார்ச் 10 – சுஹாக்காம் சிறார்கள் ஆணையராக Farah Nini Dusuki நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டு கால தவணைக்கு அவர் இந்த பொறுப்பில் இருந்து வருவார். புதன்கிழமை முதல் அவரது நியமனம் அமலாக்கு வருவதாக சட்டம் மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான பிரதமர் துறை அமைச்சர் Azalina Othman Said தெரிவித்தார். மலாயா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளரான Farah Nini கடந்த 30 ஆண்டு காலாமாக மனித உரிமைகள் மற்றும் சிறார் சட்டம் தொடர்பான விவகாரங்களில் பரவலான அனுபவத்தை கொண்டுள்ளார்.