Latestமலேசியா

சூசைமாணிக்கத்தின் சவப் பரிசோதனை அறிக்கை முறையாக இல்லை ; நிபுணத்துவ மருத்துவர் சாட்சியம்

ஈப்போ, மார்ச் 30 – 2018 -இல் ராணுவ கடற்படை பயிற்சியின் போது உயிரிழந்த பயிற்சி அதிகாரி ஜே. சூசைமாணிக்கத்தின் சவப் பரிசோதனையில் , பல விஷயங்கள் முறையாக கவனிக்கப்படவில்லை என நோயியல் நிபுணர் சாட்சியமளித்திருக்கின்றார்.

சூசைமாணிக்கத்தின் உடல் மீது நன்கு பயிற்சிபெற்ற தடயவியல் நோயியல் நிபுணர் சவப் பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு மருத்துவர் அல்ல என , டாக்டர் பூபிந்தர் (Dr Bhupinder ) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சூசைமாணிக்கத்தின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணை இன்று ஈப்போ Sesyen நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையின் போது தடயவியல் நோயியல் துறையில் 26 ஆண்டு கால அனுபவம் பெற்றுள்ள பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் பிரிவின் முன்னாள் தலைவருமான 71 வயது டாக்டர் பூபிந்தர் சாட்சியமளித்தார்.

அந்த பயிற்சி அதிகாரியின் சவப்பரிசோதனை அறிக்கையில் அவர் நுரையீரலில் நீர் கோர்த்ததால் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அவரது நுரையீரலில் நீர் கோர்த்ததற்கான காரணம் என்னவென்பதைக் கண்டறிவதே சிறப்பாக இருந்திருக்குமென அவர் கூறினார்.

மேலும், மருத்துவ தகவல்களின் படி, சூசைமாணிக்கம் சுவாசிக்க சிரமப்பட்டதோடு, தசை வலி இருந்ததோடு, சிறுநீரகமும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் அவர் எலியின் சிறுநீரால் ஏற்படும் leptospirosis தொற்றின் பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாமேன டாக்டர் பூபிந்தர் தெரிவித்தார்.

அந்த பாதிப்புகள் இருந்தபோதே முன்கூட்டியே அவருக்கு சிகிச்சையளித்திருந்தால் அவர் குணமடைந்திருக்கலாமெனவ அவர் கூறினார்.

கடற்படை பயிற்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலே இறந்த தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சூசைமாணிக்கத்தின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு மீண்டும் மே 12-ஆம் தேதி செவிமடுக்கப்படும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!