Latestமலேசியா

சூடாகும் ஐபோன் 15 மாடல்கள்; தீர்வுக் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது ஆப்பிள்

சான்பிரான்சிஸ்கோ, அக்டோபர் 3 – புதிதாக வெளியிடப்பட்ட ஐபோன் 15 விவேக கைப்பேசி மாடல்கள் விரைந்து சூடாவதற்கு காரணமான “பிழையை” கண்டுபிடித்து தீர்வுக் காணும் முயற்சிகளில் ஆப்பிள் நிறுவனம் இறங்கியுள்ளது.

உலக தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனமான ஆப்பிள், செப்டம்பர் 12-ஆம் தேதி, தனது புதிய ஐபோன் 15 சீரிஸ்களை அறிமுகப்படுத்தியது.

எனினும், செப்டம்பர் 22-ஆம் தேதி விற்பனைக்கு வந்த அந்த ஐபோன்களை வாங்கிய பயனர்கள், வெப்ப சிக்கல்களை எதிர்கொண்டனர்.

புதிய ஐபோன்கள் சூடாவதற்கான சில காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆப்பிள் கூறியுள்ளது.

புதிதாக பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதிகரிக்கும் பின்னணி செயல்பாடுகள், அல்லது பதிவிறக்கம் செய்யப்படும் முன்றாம் தரப்பு செயலிகளின் பயன்பாடுகள் காரணமாக ஐபோன்கள் விரைந்து சூடாகலாம் என அது தெரிவித்தது.

அதோடு, ஐபோன் iOS 17 மொபைல் இயக்க மென்பொருளில் ஏற்பட்டுள்ள பிழையை சரிசெய்யும் முயற்சியாக, ஆப்பிள் அதன் மேம்பாட்டாளர்களுடன் ஒத்துழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும், மென்பொருளை புதுப்பிக்கும் நடவடிக்கையால், ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் செயல்திறன் பாதிக்கப்படாது எனவும் ஆப்பிள் உத்தரவாதம் அளித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!