
கோலாலம்பூர், மே 7 – சூடானில் கலவரத்திற்குள்ளான Al Gaza வட்டாரத்தில் சிக்கிக்கொண்ட மூன்று மலேசியர்கள் 22 நாட்களுக்குப் பின் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
49 வயதுடைய Junaidah Selamat , அவரது பிள்ளைகளான 18 வயதுடைய Mohamad Ashraf மற்றும் 23 வயதுடைய Juliana Ashraf இன்று அதிகாலை மணி 4.15அளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்ததாக Bernama தெரிவித்தது.
அதே வேளையில் Junaidah Selamat –ட்டின் சூடானிய கணவரான 54 வயதுடைய Ashraf Gasim Elsimd சவுதி அரேபிய குடியிருப்பு பெர்மிட் இல்லாததால் அவர் தொடர்ந்து சூடான் துறைமுகத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்.
பதட்ட நிலையில் இருந்துவரும் சூடான் தலைநகர் Khartoum மிலிருந்து ஏற்கனவே வெளியேறிவிட்டதால் அவர் பாதுகாப்புடன் இருப்பதாக Junaidah தெரிவித்தார்.