Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

சூடான் உள்நாட்டுப் போரில் ஒரே நாளில் 56 பேர் பலி

போர்ட் சூடான், பிப்ரவரி-2 – உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடான சூடானில், நேற்று ஒரு நாளில் மட்டுமே வான் தாக்குதல்களில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

சூடானிய இராணுவமும், RSF எனப்படும் கிளர்ச்சித் தரப்பும் 2023 முதல் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்ற போராடி வருகின்றன.

தலைநகரைத் திரும்பக் கைப்பற்றும் முயற்சியில் ஜனவரியில் இராணுவம் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது.

பதிலடி கொடுக்கும் வகையில் RSF அமைப்பு சனிக்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில், பரபரப்பான சந்தைப் பகுதியில் 54 பேர் கொல்லப்பட்டு, 158 பேர் காயமடைந்தனர்.

இதனால் ஏற்கனவே மோசமாக சேதமடைந்துள்ள Al-Nao மருத்துவமனையே நிரம்பி வழிகிறது.

எனினும் அத்தாக்குதலுக்கு RSF பொறுப்பேற்க மறுத்து விட்டது.

இவ்வேளையில், RSF கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

RSF அமைப்பு ட்ரோன் தாக்குதல்களிலும் சூடானிய இராணுவம் போர் விமானங்களிலும் பலம் பெற்று காணப்படுகின்றன.

என்றாலும், இரு தரப்புமே தங்களின் சுயநலனுக்காக அப்பாவி பொது மக்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் பலிகடா ஆக்குவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த உள்நாட்டு போரினால் பல்லாயிரக்கணக்கான சூடானியர்கள் பலியாகி, 12 மில்லியன் மக்கள் அகதிகளாகியிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!