Latestஉலகம்

சூட்கேஸில் 10 லட்சம் யூரோ ரொக்கத்தைப் பெற்றாரா இளவரசர் சார்ல்ஸ்?

லண்டன், ஜூன் 27 – காத்தாரின் ( Qatar) முன்னாள் பிரதமரிடமிருந்து, பிரிட்டன் இளவரசர் Charles , 10 லட்சம் யூரோ ரொக்கம் அடங்கிய சூட்கேஸைப் பெற்றதாக அந்நாட்டு Sunday Times ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த இளவரசருக்கு, காத்தாரின் முன்னாள் பிரதமரான Sheikh Hamad bin Jassim வழங்கிய 30 லட்சம் யூரோ நன்கொடை பணத்தில் அந்த ரொக்கமும் அடங்குமென , அந்த ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

இவ்வேளையில், அந்த நன்கொடை , தொண்டு பணிகளை மேற்கொள்ளும் Charles- சின் அறக்கட்டளைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும், முறையாக நடைமுறைகளைப் பயன்படுத்தியே அந்த நன்கொடைப் பெறப்பட்டதாகவும், Charles-சின் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!