
கோலாலம்பூர், ஜன 31 – சீன புத்தாண்டு காலத்தின்போது சூதாட்ட நடவடிக்கைக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் 5லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டதோடு சுமார் ஆயிரம்பேர் கைது செய்யப்பட்டனர். ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 29 ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட OP Limau நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் படையின் செயலாளர் துணை கமிஷனர் Noorsiah Mohd Saaduddin தெரிவித்தார். அந்த 15 நாள் நடவடிக்கையின்போது 137 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.