Latestமலேசியா

சூதாட்ட விடுதி தொடர்பான கட்டுரை; ராம் ஆனந்த்திடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர்

கோலாலம்பூர், மே 6 – ஜோகூரில் உள்ள Forest city-யில் சூதாட்ட விடுதி நிர்மாணிக்கப்படலாம் என்ற அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ராம் ஆனந்த்திடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். இன்று காலை 8.30 மணிக்கு புக்கிட் அமான் வந்த ராம் ஆனந்த் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு காலை 11 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். போலீஸில் வாக்குமூலம் பெறுவதற்கு அழைக்கப்பட்ட முன்று ஊடகவியலாயர்களில் ராமும் ஒருவராவார்.

Forest city-யில் சூதாட்ட விடுதி தொடர்பான செய்தி வெளியிட்ட ஆங்கில இணையத்தள பதிவேட்டின் ஆசிரியர்களில் ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என கடந்த வெள்ளிக்கிழமையன்று போலீஸ் படைத் தலைவர் Razarudin Husain கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தேசத்துரோகம், குற்றவியல் அவதூறு மற்றும் இணையத்தள வசதிகளை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருந்தார். Malaysia Mulls Casino at forest city என்ற கட்டுரை குறித்து Berjaya குழுமத்தின் தோற்றுவிப்பாளர் Vincent Tan னின் வழக்கறிஞர் செய்திருந்த போலீஸ் புகாருக்குப் பிறகு விசாரணை தொடங்கப்பட்டதாக Razarudin குறிப்பிட்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!