லாஸ் ஏஞ்சல்ஸ், பிப் 8- 80 வயதான கன்னியாஸ்திரி, சூதாடுவதற்காகவும் , ஆடம்பரமான விடுமுறைகளுக்கு செல்லவும், ரோமன் கத்தோலிக்க ஆலயத்துக்கு வந்த நிதியில், 8 லட்சம் அமெரிக்க டாலரை இதுவரை திருடியிருக்கின்றார்.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த Mary Margaret Kreuper எனும் அந்த மூதாட்டி , ரோமன் கத்தோலிக்க தேவாலயம் வழிநடத்திய தொடக்கப் பள்ளியின் தலைவராகவும் இருந்துள்ளார். பள்ளி வளர்ச்சிக்கான நிதியில் அவர் கை வைத்ததை அடுத்து கைதான அந்த மூதாட்டிக்கு ஓராண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.