கோலாலம்பூர், மே 3 – கடந்த புதன்கிழமை பின்னிரவு மணி 12.20 வாக்கில் கோலாலம்பூரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் பாடிக்கொண்டிருந்த வெளிநாட்டு ஆடவர் உட்பட 5 வங்காளதேசிகள் ஒரு சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக ஹரியான் மெட் ரோ செய்தி வெளியிட்டிருந்தது.
கைது செய்யப்பட்ட அந்த ஆண் பாடகர் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வெற்றியாளரான திவாகர் என சொல்லப்படுகிறது.
அவர் Puspal எனப்படும் வெளிநாட்டு கலைஞர்களின் படைபுகளுக்கான பெர்மிட் வழங்கும் தரப்பின் அனுமதி இன்றி அந்த கேளிக்கை மையத்தில் பாடியதாக நம்பப்படுகிறது.
பொதுமக்களின் தகவல் கொடுத்த தகவலின் படி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை தெரிவித்திருந்தது.
103 பெண்கள் 10 வெளிநாட்டவர் உட்பட 256 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 6 வெளிநாட்ட கைது செய்யப்பட்டனர்.