Latestஇந்தியாஉலகம்சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமானையில் அனுமதி; இன்று காலை முக்கிய பரிசோதனை

சென்னை, அக்டோபர்-1, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிறு தொடர்பான பிரச்னையால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு, இருதயம் தொடர்பாக இன்று காலை முக்கிய பரிசோதனை செய்யப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும் அதுவொரு வழக்கமான பரிசோதனையே என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

74 வயதாகும் ரஜினிகாந்த் ஏற்கனவே 2020-ம் ஆண்டு டிசம்பரில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

உடல்நலக்குறைவை காரணமாகக் கூறி, அரசியலுக்கு வரும் முடிவையும் அவர் அப்போது கைவிட்டார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

‘ஜெயிலர்’ படத்துக்குப் பிறகு பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!