
இஸ்கண்டார் புத்ரி, மார்ச் 8 – கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் செகாமாட் Chaah -வில் உள்ள சுகாதார கிளினிக் முழுமையாக சேதமுற்றது.
வெள்ளத்தில் அந்த கிளினிக்கில் உள்ள அனைத்து தளவாடங்களும் பாதிப்படைந்ததாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ling Tian Soon தெரிவித்தார்.
அதையடுத்து, Chaah பொது மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் சுகாதார கிளினிக்கில் , மக்களுக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக அவர் கூறினார்.
இவ்வேளையில் ஜோகூரில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தில் , மொத்தம் 24 சுகாதார கிளினிக்குகள் பாதிப்படைந்திருப்பதாக அவர் கூறினார்.