குவாலா லங்காட், ஆகஸ்ட்-30 – சிலாங்கூர், பந்திங் – குவாலா லங்காட், செக்ஷன் 1 மேற்குக் கரையோர நெடுஞ்சாலையில் (WCE) இன்று நள்ளிரவு 12.01 மணி தொடங்கி ஒரு மாதத்திற்கு டோல் கட்டணம் இலவசமாகும்.
பந்திங் அடுக்குச் சாலைச் சந்திப்பு தொடங்கி தென் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலைyin (SKVE) அடுக்குச் சாலைச் சந்திப்பு வரையிலான பயணத்தை, அந்த டோல் கட்டண விலக்கு உட்படுத்தியிருக்கும்.
செப்டம்பர் 29 இரவு மணி 11.59 வரை ஒரு மாததிற்கு டோல் கட்டணம் இல்லாமல் பயணிகள் பயன்படுத்தலாமென, பொதுப் பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
67-வது தேசிய தினக் கொண்டாட்டம், மலேசிய தினம் உணர்வின் அடிப்படையிலும், My Jalan செயலியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டும் அந்த டோல் கட்டண விலக்கு வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இன்று காலை செக்ஷன் 1 WCE நெடுஞ்சாலையைத் திறந்து வைத்து உரையாற்றிய போது அமைச்சர் அவ்வாறு கூறினார்.
12.5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த செக்ஷன் 1 WCE நெடுஞ்சாலை SKVE-யுடன் இணைவதால், பந்திங் சுற்று வட்டார மக்கள் தென் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளான புத்ராஜெயா, பாங்கி, காஜாங் போன்ற முக்கிய நகரங்களுக்கு மேலும் எளிதாக பயணம் செய்ய வாய்ப்பேற்படும் என்றார் அவர்.