Latestமலேசியா

செத்தியா ஆலாமில் காரோட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டிக்கு வலை வீச்சு

ஷா ஆலாம், அக்டோபர்-1, ஷா ஆலாம், செத்தியா ஆலாமில் ஆடவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை போலீஸ் தேடுகிறது.

சனிக்கிழமை மாலை அச்சம்பவம் நிகழ்ந்தது.

Yamaha 135LC மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 29 வயது Mercedez Benz காரோட்டியை மோதியது போல் பாசாங்கு செய்துள்ளார்.

காரில் ஏற்பட்ட சேதாரத்தைப் பார்ப்பதற்கு ஓட்டுநர் வெளியில் இறங்கி வந்த போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரின் கழுத்திலிருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு அந்நபர் ஓட்டம் பிடித்தார்.

காரோட்டி பலங்கொண்டு இழுத்ததால், திருடனால் பாதி சங்கிலியைத் தான் எடுத்து கொண்ட ஓட முடிந்தது.

காரோட்டிக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை.

சங்கிலி பறிபோனதில் அவருக்கு 1,500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளோட்டியின் செயல் பாதிக்கப்பட்டவரின் கார் dashcam-மில் பதிவாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!