Latestமலேசியா

செந்தூலில் கொள்ளை 2 சகோதரர்கள் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஏப் 5 – அண்மைய சில மாதங்களாக செந்தூல் வட்டாரத்தில் ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளையிட்டதன் தொடர்பில் இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது இரு நண்பர்கள் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. பிப்ரவரி 6 ஆம்தேதி செந்தூல் வட்டாரத்தில் பெட்ரோல் நிலைய ஊழியரான 49 வயதுடைய வங்காளதேச ஊழியரிடம் 5,500 ரிங்கிட் , 17 சிகரெட் பொட்டலங்கள், கண்ணாடிகள் மற்றும் ரொக்கத் தொகையையும் கொள்ளையிட்டதாக 32 வயதுடைய Nasrul Wafy Harizan மற்றும் அவரது சகோதரரான 36 வயதுடைய khairul Anuar , 30 வயதுடைய அவர்களது நண்பர் Dzulkifli Ahmad ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி Fadzlin Suraya முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த அந்த இரண்டு சகோதரர்களும் விசாரணை கோரினர். அந்த இரண்டு சகோதரர்களும் Syazwan Sazali என்ற 34 வயதுடைய மற்றொரு நண்பருடன் சேர்ந்து மார்ச் 24ஆம் தேதி செந்தூலில் பிற்பகல் மணி 2.20 அளவில் 17 வயது பெண்ணிடமும் கொள்ளையிட்டாக மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டுவரப்பட்டது. குற்றவியல் சடடத்தின் 395 ஆவது விதியின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் அந்த இரண்டு சகோதரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர், அதே வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட மேலும் இருவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!