கோலாலம்பூர், பிப் 19 – செந்தூலில் உள்ள உணவகம் ஒன்றில் அதிஸ்டம் வருவதற்காக வைக்கப்பட்டதாக நம்பப்படும் பதனப்படுத்தப்பட்ட புலித்தோல் ஒன்று வைக்கப்பட்டிருந்ததை பூங்கா மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள் புலியின் தலையைக் கொண்டதாக ஒரு கிண்ணம், புலித் தோல் மற்றும் கரடி தோல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்ததாக வனவிலங்கு பூங்காத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ Abdul Kadir Abu Hashim தெரிவித்தார்.
இதனிடையே 2015ஆம் ஆண்டுக்கும் இவ்வாண்டுக்குமிடையே கோலாலம்பூரில் மூன்று புலித் தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.